Cinema
"பாலிவுட்டில் எனக்கு எதிராக வேலை செய்யும் கும்பல்" - ஏ.ஆர்.ரஹ்மான் 'பகீர்' குற்றச்சாட்டு!
இந்தியில் ஏ.ஆர். ரஹ்மானின் மிக சமீபத்திய படம் ”தில் பெச்சாரா”, இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஓடிடி-யில் வெளியானதைத் தொடர்ந்து ஒரு தனியார் ரேடியோவிற்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்ப் படங்களை ஒப்பிடுகையில் இந்தியில் குறைவான படத்தில்தான் வேலை செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அவர் கூறியதாவது, நல்ல படங்களை நான் ஒரு போது பண்ண மாட்டேன் என்று மறுத்தது இல்லை என்றும், ஆனால் இந்தி திரையுலகில் ஒரு கும்பல் தனக்கு எதிராக வதந்திகளைப் பரப்புவதாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
“என் ரசிகர்கள் என்னிடம் இருந்து நல்ல படங்களை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது நடப்பதைத் தடுக்க மற்றொரு கும்பல் என்னை வேலை செய்யவிடாமல் இருக்கச் செயல்படுகிறது” என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார், “தில் பெச்சாரா” பட இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது, இரண்டு நாட்களில் நான்கு பாடல்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் என்னிடம், கூறியதாவது 'ஐயா, எத்தனை பேர் வந்து அவரிடம் (ஏ.ஆர்.ரஹ்மான்) போக வேண்டாம், என்று கதைக்கு மேல் கதை சொன்னார்கள் தெரியுமா என்றார்.
அப்போதுதான் நான் உணர்ந்தேன் ஏன் குறைவான இந்தி படங்களில் வேலை செய்கிறேன் என்றும், ஏன் எனக்கு நல்ல திரைப்படங்கள் வரவில்லை என்பதையும் என்றார். அவர்கள் தீங்கு செய்கிறார்கள் என்று தெரியாமலே ஒரு முழு கும்பலும் எனக்கு எதிராகச் செயல்படுகிறது என்றார்.
இருந்தும் இது நல்லதுதான் என்றும் ஏனென்றால் நான் விதியை நம்புகிறேன், எல்லாம் கடவுளிடமிருந்து வருகிறது என்று நான் நம்புகிறேன் எனவே, நான் தற்போது எனது பிற விசயங்களில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இறுதியில் ,”ஆனால் நீங்கள் அனைவரும் என்னிடம் வருவதை வரவேற்கிறேன் நல்ல படங்களை உருவாக்க ” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!