Cinema
முதல் 30 நிமிடக் கதையைச் சகிக்க முடியாமல் அருமையான படத்தைத் தவறவிட்ட விமர்சகர்கள்!
2017ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படம் 'One Cut Of The Dead'. ஜாம்பி படம் போன்ற தோற்றத்துடன் தலைப்பில் இருந்து போஸ்டர், ட்ரெய்லர் வரை அவ்வாறாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டிருந்தது. ரசிகர்களை பயங்கர வியப்பிற்கு ஆளாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அப்படக்குழுவினர் அவ்வாறு வெளியிட்டிருந்தனர்.
ஆனால் நடந்ததோ வேறு, 'ஹவுஸ்ஃபுல்' என்ற படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலிலேயே மக்கள் கலைந்து செல்லும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி போன்று, முதல் 30 நிமிடத்தில், அசுவாரஸ்யமான நடிப்பு மற்றும் கதை எந்த சுவாரஸ்யமும் இன்றி, பார்ப்பவர்கள் முதல் இருபது நிமிடத்திலேயே தூங்கி வழியும் வகையிலான படமாக இருந்தது.
பல விமர்சகர்களும், ரசிகர்களும், 20 நிமிடத்திற்கு மேல் இருக்கையில் அமரமுடியாமல் கதவை உடைத்துக்கொண்டு வெளியே சென்று, படத்தைப் பற்றி மிகமோசமான விமர்சனங்களை வைத்தனர். ஆனால் 30 நிமிடத்தைத் தாண்டி, படம் செல்லும் போக்கும், கதையில் இருக்கும் சுவாரஸ்யமும் மெதுவாகவே அனைவருக்கும் புரியவந்தது.
காலை முதல் மாலை 6 மணி வரையில் மிகவும் சாதுவாக இருக்கும் வடிவேலு, 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்று போதையை ஏற்றிக்கொண்டு செய்யும் லூட்டிகளைப் போல் 30 நிமிடங்களை கடந்ததும், ‘One Cut Of The Dead’ தனது சுயரூபத்தை காட்டும்.
சரி, முதல் 30 நிமிடத்தை பொறுக்க முடியவில்லை என்பதால், TV-யிலோ, மற்ற OTT தளத்திலோ இந்தப் படத்தை காணும் போது அந்த 30 நிமிடத்தை ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்துவிடலாமா என்று கேட்டால், கூடாது என்பதே பதில். அந்த சகிக்கமுடியாத 30 நிமிடத்திற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் அடுத்த 1 மணி நேரம் அமைந்திருக்கும்.
குறைந்த செலவில் ஒரு ஜாம்பி படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், படக்குழு இரண்டாம் உலகப்போரில் கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த பங்காளவிற்குள் செல்கிறது. அங்கு அவர்களுக்கு நடக்கும் அசம்பாவிதங்கள்தான் கதை. ஒரு நகைச்சுவைப் படமாக மட்டும் இல்லாமல், இயக்குனரின் வலி, தந்தை மகளின் பாசம் என்று ஒரு உணர்வுப்பூர்வமான படமாகவே இது திகழ்கிறது.
தன் முதல் படமாக இதனை எழுதியும் இயக்கியும் உள்ளார் 'ஷினிசிரௌ உயிடா' (Shinichirou Ueda) நிறைய உள்ளர்த்தங்களை அடக்கிய கதையாக இதனை வடிவமைத்ததிலும் சரி, ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் கதை தனக்கான நேர்கோட்டிலேயே போவதிலும் சரி, திறம்படச் செய்திருக்கிறார்.
ஒரு காட்சியைக் கூட அசையாமல் எடுப்பதே சிறந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியாக இருப்பினும், இந்த கதைக்காக அந்த மனோபாவத்தை உடைத்திருக்கிறார் ட்ஷயோஷி சோன் (Tsuyoshi Sone). நடிகர்களும் மற்ற கலைஞர்களும் அவரவர் வேலையை மிகவும் நேர்த்தியாகச் செய்து சிறப்பான படத்தையே கொடுத்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?