Cinema

இந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. ‘மாஸ்டர்’ படத்துக்கு மாஸ்டர் ப்ளான்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர், முதலமைச்சர் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கும், சினிமா தொழிலாளர்களின் நலுக்கும் என நடிகர் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியளித்தது கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அவரது ரசிகர்களும், சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருப்பது விஜய்யின் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸாகவிருந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் படம் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் படத்தை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது ‘மாஸ்டர்’ படத்தை தமிழில் மட்டுமல்லாமல், தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரபல திரையரங்க நிறுவனமான ஐநாக்ஸ், விஜய்-விஜய் சேதுபதி நடிப்பிலான ‘மாஸ்டர்’ இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டளவில் ரசிகர்கள் இருந்தாலும், அவரது படங்கள் தமிழிலேயே வெளியாவது வழக்கம். தற்போது இந்திய அளவில் முதல் முறையாக டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பது இதுவே முறையாகும்.

Also Read: கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி!