Cinema
கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 கோடி வழங்கிய ராகவா லாரன்ஸ்... இன்னொரு முக்கிய அறிவிப்பு! #Covid19
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கால் ஏழை எளிய மக்களும், கூலித் தொழிலாளர்களும் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணமும், தன்னார்வலர்கள் உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், நடனக் கலைஞருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 கோடி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
மேலும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையே, ரஜினி நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?