Cinema
“அன்புச்செழியனின் 77 கோடி ரூபாய் பறிமுதல்; விஜய்யிடம் விசாரணை தொடர்கிறது” : வருமான வரித்துறை தகவல்!
சினிமா தயரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
அதேபோல, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரையில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், நெய்வேலியில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யை விசாரணைக்காக சென்னை அழைத்துச் வந்தனர். பின்னர் நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வருமான வரி சோதனைகளுக்குப் பின்னணியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசின் சதி வேலை இருப்பதாக பலரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இந்நிலையில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக திரைத்துறையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரது விநியோகஸ்தர் மற்றும் ஃபைனான்சியர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அண்மையில் வெளியாகி ரூ. 300 கோடி வசூல் செய்த படம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை என மொத்தம் 38 இடங்களில் சோதனை நடைப்பெற்றது.
இந்தச் சோதனையில், ஃபைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்து ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின்படி இந்த வழக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது ரூ. 300 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட விநியோகஸ்தருக்கு சொந்தமான ஆவணங்கள் அவரது நன்பர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சோதனை செய்யப்பட்ட தயாரிப்பாளர் படம் தயாரிப்பு, விநியோகம், மல்டி ஃபிளக்ஸ்களில் படம் திரையிடல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர். அவரது அலுவலக வளாகங்களில் இருக்கும் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்தது, செலவுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடிகரை பொறுத்தவரை அசையா சொத்துக்களில் செய்துள்ள முதலீடுகள், சோதனைக்கு ஆளாகியுள்ள தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க வாங்கிய பணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. மேலும், சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!