Cinema
நேருக்கு நேர் மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? : மாஸ்டர், சூரரைப் போற்று ரிலீஸ் தேதி வெளியானது!
லோகேஷ் கனகராஜ் உடனான விஜயின் 64வது படமாக ‘மாஸ்டர்’ உருவாகி வருகிறது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். இதனையடுத்து, அடுத்தடுத்த அப்டேட்டுக்காக மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என முன்பே தெரிவிக்கப்பட்டதால் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படபிடிப்புகள் ஜனவரிக்குள் நிறைவடைந்து பின்னணி பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
அநேகமாக விஜயின் மாஸ்டர் படம் ஏப்ரல் 14 சித்திர திருநாளை முன்னிட்டு வெளிவரலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தொடர்பான புது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் சித்திரை திருநாளுக்கு முன்பே ஏப்.,9ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகையால் மக்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வந்தால் படத்தின் வசூலும் அமோகமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
சூரரைப் போற்று படத்தின் டீசர் வருகிற ஜனவரி 7ம் தேதி ரிலீசாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விஜயின் மாஸ்டர் படம் ரிலீசாகும் அன்றே சூரரைப் போற்று படமும் ரிலீசாகவிருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதை தவிர்ப்பது வழக்கம். ஆனால், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜயின் மாஸ்டர் இவ்விரு படங்களுக்கும் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பு இருந்து வருவதால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 8 ஆண்டுகளுக்கு கடந்த 2011ல் விஜயின் வேலாயுதம், சூர்யாவின் 7ம் அறிவு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!