Cinema
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் அசுரன், கனா உள்ளிட்ட 12 திரைப்படங்கள் : பட்டியல் இதோ !
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் ஒத்துழைப்பில், தமிழக அரசின் நிதியில் ICAF எனும் அமைப்பு சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் சென்னையில் டிசம்பர் மாதம் இந்த திரைப்பட விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அதுபோல, இந்த ஆண்டும் டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
17வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவின் தொடக்க நாளின் போது திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
மேலும், நாளை மறுநாள் தொடங்கவுள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி பாலா, தேவி, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாசார மையம் மற்றும் தாகூர் திரைப்பட மையம் ஆகிய தியேட்டர்களில் உலக சினிமா முதல் தமிழ் சினிமாக்கள் வரை திரையிடப்படவுள்ளன.
இதில் ஒத்த செருப்பு 7, சீதக்காதி, சில்லு கருப்பட்டி, கனா, பக்ரீத், தோழர் வெங்கடேசன், அசுரன், ஹவுஸ் ஓனர், ஜீவி, மெய், பிழை, அடுத்த சாட்டை ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவை அனைத்தும் ரஷ்யன் கலாசார மையத்தில் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை நாளொன்றுக்கு 2 படங்கள் வீதம் 6 நாட்களுக்கு திரையிடப்படவுள்ளன.
மேலும், இந்தியன் பனோரமா என்ற பிரிவில் ஹெல்லாரோ, பரீக்ஷா, நேதாஜி, அமோரி, உயரே உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், உலக சினிமாக்களை பொறுத்தவையில் பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின், பெல்ஜியம், ஈரான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 95 படங்கள் திரையிடப்படுகின்றன.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!