Cinema
முன்கூட்டியே ரிலீசாகிறது ரஜினியின் ‘தர்பார்’ : ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது தர்பார் படம். லைகா நிறுவனம் தயாரித்திருத்துக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தர்பார் படத்தில் தன்னுடைய பகுதிக்கான டப்பிங் வேலைகளை ரஜினிகாந்த் நான்கே நாட்களில் முடித்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழு தயாராகி வருகிறது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, தர்பார் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினி கதாப்பாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து லைகா நிறுவனம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் அதற்கு முன்னதாக தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஜனவரி 9ம் தேதியை வெளியீட்டு தேதியாக அறிவித்துள்ளது லைகா.
ஏற்கெனவே தர்பார் படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் திருவிழாவை போல கொண்டாடி வரும் ரஜினி ரசிகர்கள், தற்போது படம் முன்கூட்டியே வெளிவரவிருப்பதால் பொங்கல் பண்டிகையை தர்பார் திருவிழாவாக கொண்டாட பிரயத்தனமாகியுள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?