Cinema
ரசிகர்கள் கொண்டாடும் ‘தேவசேனா’ : அனுஷ்கா பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
2009ம் வருடம்!
இரட்டை வேடங்களில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் 'அருந்ததி' என்னும் படம் வெளியாகிறது. 14 கோடியில் உருவான அந்தப் படம் வசூல் செய்தது 75 கோடிக்கும் மேல். அடுத்து தமிழ் பில்லாவின் தெலுங்கு ரீமேக்கில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார். அந்தப் படமும் அங்கு செம்ம ஹிட். அடுத்ததாக இங்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து வேட்டைக்காரன் வெளியாகிறது. அதுவும் ஹிட். இத்தனையும் ஒரே வருடத்தில். ஒரு மாஸ் ஹீரோவுக்கான க்ராஃப் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அனுஷ்கா தன் க்ராஃபை வைத்திருக்கிறார்.
அனுஷ்கா நடிக்க அறிமுகமான புதிதில் அவரை வழக்கமான ஒரு கமர்ஷியல் ஹீரோயினாகவே எல்லாப் படங்களிலும் பயன்படுத்தினார்கள். அப்போது அவரைப்பற்றி எழுதிய விமர்சகர்கள் "அனுஷ்காவிற்கு இந்தப் படத்தில் பெரிய வேலையெல்லாம் இல்லை. ஆனால் அதற்காகத்தான் அவரை இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்." இப்படித்தான் எழுதினார்கள்.
2009-க்குப் பிறகு அதே விமர்சகர்கள் அனுஷ்காவை ஆஹா ஓஹோவென்று பாராட்டினார்கள். இதற்கு நடுவில் மாபெரும் கலைப்படங்களை அனுஷ்கா படைத்துவிட்டாரா? அதெல்லாம் இல்லை, 2009-லிருந்து ஓடும் குதிரைகளில் பயணிக்கத் தொடங்கியிருந்தார். பில்லா ரீமேக்கில் பிரபாஸுடன் நடிக்கவும் யோசிக்கவில்லை, ராஜமௌலியின் இயக்கத்தில் விக்ரமார்குடுவில் ரவிதேஜாவுடன் நடிக்கவும் யோசிக்கவில்லை. எனில் பாகுபலிக்கான தேவசேனாவாக ராஜமௌலி வேறு யாரையும் யோசிக்கமாட்டார். இதில் இருக்கும் தர்மத்தை நாம் தான் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டுமே தவிர, அனுஷ்கா எப்போதும் கொண்டாடுவதற்கு உரியவரே!
இத்தனை பாராட்டுதலுக்கு உரியவராக அனுஷ்கா இருப்பதற்குக் காரணம், இங்கே எல்லா பாராட்டுகளும், வெற்றிகளும், அதே நேரத்தில் எல்லா வியாபாரங்களும் ஹீரோக்களை மையமாக வைத்தே நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, எப்படியேனும் கொஞ்சமாக தங்களை மையப்பொருளாக கதாநாயகிகள் ஆக்கிக்கொள்ள முயற்சி செய்யும்போது அது இந்த துறையில் சிறிய மாற்றத்தையேனும் ஏற்படுத்தும்.
ஆனால் அதற்கே கதாநாயகிகள் ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி, ஹீரோக்களுக்கான அத்தனை சாகசங்களும் செய்து, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெயரைத் தான் எடுக்கமுடிந்தது. ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் என்ற படியை நோக்கி இந்த துறையையும் கொண்டு செல்வோம். அப்படித்தான் அனுஷ்கா எனும் கதாநாயகி தன் பிறந்தநாளைக் கொண்டாட ஆசைப்படுவார்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?