Cinema
’ரெயின்போ கிக்'- பிகில் ஃபுட்பால் காட்சிகளுக்காக விஜய் என்ன செய்தார் தெரியுமா? - ஜி.கே விஷ்ணு சொன்ன உண்மை
நடிகர் விஜய் 60 படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும், பிரதிநிதித்துவம் நிறைந்த காட்சிகளுக்கு மெனக்கெடும் வழக்கத்தை இன்றளவும் விட்டுக்கொடுக்காமலே இருக்கிறார்.
அந்த வகையில் பிகில் படத்திலும் ஒரு காட்சியில் அப்படி ஒரு மெனக்கெடல் கொடுத்திருக்கிறார் விஜய். எந்த காட்சி என்பதை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணுவே கூறியிருக்கிறார்.
தனியார் இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ள அவர் பிகில் படத்தில் பணியாற்றியது தொடர்பாக பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒன்றுதான் விஜயின் மெனக்கெடல்.
"மைக்கேல் கதாபாத்திரத்தின் கால்பந்து விளையாட்டு போர்ஷன் வரும் போது, அனிமேஷன் எதுவும் வேண்டாம் எனக் கூறி தானே அதனை ஃபுட்பால் விளையாடுவதாக விஜய் கூறினார். ஃபுட்பால் ஷாட்ஸ்காக நேரம் எடுத்து பயிற்சியும் மேற்கொண்டார். ஆகையால் அதற்கு எந்த CGயும் இல்லாமலேயே படமாக்கப்பட்டது.” என்றார்.
மைக்கேல் கேரக்டரில் ’ரெயின்போ கிக்’ விளையாடியதை, ரசிகர்கள் வெகுவாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும், தானும் விஜய் ரசிகராக இருந்ததால் அவரது மெனக்கெடலுக்கு எந்த பங்கமும் ஏற்படாதவாறு கேமிராவிலும் விளையாடிவிட்டேன் என்கிறார் ஜி.கே.விஷ்ணு.
மைக்கேல் கேரக்டரில் ’ரெயின்போ கிக்’ விளையாடியதை, ரசிகர்கள் வெகுவாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அட்லி, விஜய் காம்போவில் கடந்தமுறை வெளியான மெர்சல் படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். குறிப்பாக ஆளப்போறான் பாடலுக்கு இவர் செய்திருந்த ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராமே தனிப்பட்ட முறையில் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பாடல் காட்சி அமைக்கப்பட்ட விதம் குறித்தும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!