Cinema
நடிகர் விஜய் சொன்னதைக் கேட்டு பேனருக்கு பதிலாக நெல்லை ரசிகர்கள் செய்த சூப்பரான ஏற்பாடு - மக்கள் பாராட்டு!
அ.தி.மு.கவினர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது மாநில அளவில் பெரும் தாக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து இனி கட்சி சார்ந்தோ, திரைப்படங்கள் வெளியாவதற்கோ சட்ட விரோதமாக பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதுபோல, சமீபத்தில் நடந்த ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய்யும் தனது ரசிகர்களிடம் பட ரிலீஸுக்கு பேனர் வைக்கவேண்டாம் என அன்புக்கட்டளை இட்டிருந்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் (அக்., 25) பிகில் படம் ரிலீஸாகவுள்ளது. அதற்காக நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஃப்ளக்ஸ் பேனர்களை வைக்காமல் சமுதாயத்துக்கு நல்லது செய்யும் வகையில் சிறப்பான செயலை முன்னெடுத்துள்ளனர்.
அதாவது, நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பிகில் பட ரிலீஸை முன்னிட்டு நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை விஜய் ரசிகர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இதனைப் பாராட்டி நெல்லை காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய்யின் ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். இனி நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!