Cinema
“பாலாவின் வர்மாவை விஞ்சியிருக்கிறதா ஆதித்யா வர்மா? ”- எப்படி இருக்கிறது ‘அர்ஜூன் ரெட்டி’ தமிழ் ட்ரெய்லர்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் அர்ஜூன் ரெட்டி. அசாத்தியமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்த விஜய் தேவரகொண்டாவை தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்திருந்தது.
அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றிருந்தது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கை எடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதனையடுத்து இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’ என்ற தலைப்பில் படம் உருவானது. வர்மா படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படம் ரிலீஸை எதிர்நோக்கியிருந்த சமயத்தில் வர்மாவின் இறுதி வடிவம் நன்றாக அமையவில்லை என்பதால் பாலாவின் இயக்கத்தில் உருவான படத்தை E4 Entertainment நிறுவனம் கைவிட்டது.
புதிய இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளை வைத்து வேறு பரிமாணத்தில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் உருவாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் பிறகு அர்ஜூன் ரெட்டி படத்தில் பணியாற்றிய கிரிசய்யாவின் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’வாக படம் புத்துயிர் பெற்று தற்போது ட்ரெய்லர் மற்றும் இசை வெளியாகியுள்ளது.
அறிமுக நடிகர் போலில்லாமல் ஆதித்யாவாக துருவ் சிறப்பாகவே நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சாந்துவும் நடித்துள்ளார். மேலும், லீலா சாம்சன், வேதம் புதிது, கருத்தம்மா புகழ் ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்கள் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் நடித்துள்ளனர்.
ரதன் இசையில், ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா 2019ம் ஆண்டு இறுதியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கெனவே வெளியான ‘எதற்கடி’, ‘ஏன் என்னை பிரிந்தாய்’ பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது முழு ஆல்பமும் வெளியாகியுள்ளது. படம் வருகிற நவம்பர் 8ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
முன்னதாக, அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபிர் சிங்’ ஷாயித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியில் சக்கப்போடு போட்டது. அதுபோல, துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மாவும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!