Cinema
பிகில் : கதைத் திருட்டு விவகாரம் - கதைக்கு உரிமை கோரும் இயக்குநரின் உருக்கமான பேஸ்புக் பதிவு !
நடிகர் விஜயுடன் 3வது முறையாக சேர்ந்தஅட்லீயின் இயக்கத்தில், வருகிற 25ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீசாவதற்காக காத்திருக்கிறது பிகில் படம். இதில், நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு பிகில் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை வெளியிட தடைக் கோரி உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், உதவி இயக்குநர் கே.பி. செல்வா ஃபேஸ்புக்கில் கதை திருட்டு விவகாரம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு தயாரிப்பாளரிடம் கதையைக் கொடுத்துட்டு வந்ததுக்கு அப்புறம் அவங்ககிட்ட இருந்து ஒரு கால் வராதா, நம்ம வாழ்க்கை மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குநர்கள்ல நானும் ஒருவன்.
போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்தக் கதை பிரச்சினை தொடங்குச்சு. உங்ககிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல, எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின விஷயங்கள் வாய்ஸ் ரெக்கார்ட் உங்ககிட்ட இருக்கு. ஒரு வேலை மறந்திருந்தா அதைக் கேளுங்க.”
“நாங்க படத்தை தடை செய்யணும்னு ஒரு விதத்துலயும் நினைக்கல. எங்க நோக்கமும் அது இல்ல. காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான். இவ்ளோ பெரிய இயக்குநர பத்தி பேச இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?ன்னு நிறைய பேர் சொல்றீங்க. என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தைக் கேக்கணும்னு நெனைச்சேன் கேட்டேன். அவ்ளோதான். இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குநர் ஆபீஸ் வாசல்ல நிற்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது” என நீள்கிறது செல்வாவின் பதிவு.
இந்த நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த நந்தி சின்னி குமார் என்ற எழுத்தாளரும், இயக்குநருமான இவர், அம்மாநில எழுத்தாளர்கள் சங்கத்தில் whistle (பிகில்-தெலுங்கில்) கதை தொடர்பாக கடந்த அக்.,16ம் தேதி காப்புரிமை புகார் கொடுத்துள்ளார்.
அதில், அகிலேஷ் பால் என்ற கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி தான் எடுக்கவிருந்த படமான Slum Soccer-ன் கதையே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகிலின் கதை.
Slum Soccer படத்தை உருவாக்குவதற்கான உரிமம் பெற்றுள்ளேன். படத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், கடந்த 2018ம் ஆண்டே அகிலேஷ் குமாரின் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கும் உரிமத்தை பெற்றுள்ளதாகவும், அதே ஆண்டு ஜூலை 7ம் தேதி எழுத்தாளர்கள் அசோசியேஷனில் பதிவும் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிகில் படத்தின் தந்தை ராயப்பன் மற்றும் பிகில்/மைக்கேலின் கதாப்பாத்திரமும், அகிலேஷ் பாலின் வாழ்க்கையும் ஒத்துப்போகக் கூடியது.
இந்த விவகாரம் தொடர்பாக பிகில் படக்குழுவை தொடர்பு கொண்டு பேசியும் ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் நந்தி சின்னி குமார்.
இதனையடுத்து தொடர்ந்து புகாருக்கு ஆளாகி வரும் இயக்குநர் அட்லீயோ இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!