Cinema
இது அனிருத் தர்பார் : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!
''ஒய் திஸ் கொலவெறி டி'' பாடல் வெளியாகி உலக லெவல் ஹிட்டான சமயத்தில் என்ன யோசித்திருப்போம்? ஒரு பாடல் ஏதோ ஃப்ளுக்கில் அமைந்துவிட்டது என்பது பரலவலான ஒன்றாக இருக்கும். அதுவே 3 படத்தின் முழு ஆல்பமும் வெளியாகி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஹிட்டான போது? ”சரி ஒன் டைம் வொண்டர்பா! அடுத்து வந்தா பாக்கலாம்” என்பதாகத் தான் அப்போது மிகப் பரவலான டாக்காக இருந்திருக்கும்.
ஆனால், அடுத்தடுத்து அனிருத் காட்டிய வளர்ச்சி, கோலிவுட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா துறையையே திரும்பிப்பார்க்க வைத்த வளர்ச்சி.
இரண்டாவது படம் எதிர்நீச்சல். தனுஷ் தயாரிப்பு, சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோ என்கிற சில அட்ராக்ஷன்கள் இருந்தாலும், படத்தைப் பற்றி இப்போது நினைத்தாலும், எதிர் நீச்சலடி என்கிற அனிருத்தின் குரல் தான் முதலில் நினைவுக்கு வரும்.
இரண்டே படம் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய அழுத்தமான தடத்தைப் பதித்தார் அனிருத். இந்த சமயத்தில் இசைப் பிரியரான பிஜோய் நம்பியார், அவர் இயக்கத்தில் தமிழ் இந்தியில் உருவான டேவிட் படத்துக்கு ஒரே ஒரு பாடலை இசையமைத்துத் தர சொல்லிக் கேட்கிறார்.
ஒரு பாடல்தானே என இல்லாமல், கொடுத்தார் ஒரு மெலடி. அதுதான் கனவே கனவே. இதன் இந்தி வெர்ஷனும் பெரிய ஹிட். இப்போது வரை பலரது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை அலங்கரிக்கிறது இந்த பாடல்.
'வணக்கம் சென்னை’க்கான டீசரில் வந்த `எங்கடி பொறந்த பாடல்தான்’ அந்தப் படத்துக்கான மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்த்தது. கூடவே அதில் வந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர், ஐலசா, ஹே பெண்ணே பெண்ணே என ஒவ்வொன்னும் ஒவ்வொரு ப்ளே லிஸ்டில் நின்று விளையாடியது.
அதுவரை ஹாரீஸ் இசையமைத்திருந்த இரண்டாம் உலகம் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார் என்கிற தகவல் வர, செல்வராகவன் - அனிருத் கூட்டணி ரகளையாக இருக்குமே என ரசிகர்கள் தயாரானார்கள். `பெண்ணே நான் என்ன சொல்ல’ உட்பட மூன்று துண்டு பாடல்கள் மட்டுமே அவர் இசைமைத்தார் என்கிற ஏமாற்றாம் இருந்தாலும். படத்தின் பின்னணி இசையில் வெரைட்டி விருந்து வைத்தார் அனிருத்.
அடுத்து வந்தது `வி.ஐ.பி’. பேரைக் கேட்டாலே நினைவில் ஒலிக்கும் முதல் குரல் வேலையில்லா என நரம்பு புடைக்க அனிருத் பாடும் அந்த டைட்டில் ட்ராக்கே சொல்லும், அந்தப் படத்தின் ஹிட்டுக்கு அனிருத் எவ்வளவு பெரிய காரணம் என்று. மாஸ் ட்ராக் மட்டும் இல்லை க்ளாஸ் மியூசிக்கிலும் கெத்துதான் என அம்மா அம்மா, போ இன்று நீயாக பாடல்களும் அந்த ஆல்பத்தில் சூப்பர் ஹிட்டானது.
மான்கராத்தே படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் தான். அதைத்தாண்டி பின்னணி இசை மிக சகஜமாக எல்லோரையும் ஈர்த்தது. அந்த ஈர்ப்புதான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான `கத்தி’ படத்துக்கு அனிருத் இசையமைக்க காரணம்.
ஆம், இதை முருகதாஸே ஒரு பேட்டியின் போது, “எங்க அப்பார்ட்மெண்ட் பசங்க எல்லாம் டார்லிங்கு டம்பக்குனு ஒரு பாட்டும், மான் கராத்தேனு ஒரு ட்யூனையும் பாடிட்டே இருந்தாங்க. பசங்க வரைக்கும் ரீச் ஆகுதுன்னா, அவர் மியூசிக்ல எதோ மேஜிக் இருக்கு.
அது கத்தியிலும் ஒர்க் ஆனது” என சொல்லியிருந்தார். சொன்னது போலவே கத்தி படத்தின் பக்கம் வந்து, செல்ஃபி புள்ள என ஒவ்வொன்றும் மாஸ் ஹிட். படத்தின் பின்னணி இசையும் அட்டகாசமான கவனம் பெற்றது.
இதன் பிறகு அனிருத் மியூசிக் என்றாலே, கண்டிப்பா பாடல்கள் ஹிட் என்கிற நம்பிக்கை திரையுலகைத் தாண்டி ரசிகர்களுக்குமே வந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதை நிரூபிக்கும் வகையில், அவரது அடுத்த படங்கள் அத்தனையிலும் தவராமல் ஹிட் பாடல் வந்து விழுந்து கொண்டே இருந்தது.
இங்கு மட்டுமில்லை, தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் உருவான `அஞ்ஞாதவாசி’ படத்தில் பாடல்களாக இருக்கட்டும், நானி நடித்த `ஜெர்சி’, `கேங் லீடர்’ பட பாடல்களாக இருக்கட்டும் எல்லாமே ஹிட்டாகி ஆந்திராவையும் அதிரடித்தார்.
ரஜினியின் பேட்டயிலும் மரண மாஸ் காட்டியவர் அடுத்து கையில் வைத்திருப்பதும், ரஜினியின் தர்பார், கமலின் இந்தியன் 2, விஜயின் 64வது படம் என கொல மாஸ் காம்பினேஷன்கள். இதிலும் அசத்தப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் நமக்கு இல்லை.
கூடவே தன் பர்த்டேவுக்கு சாக்லெட்டுக்கு பதில் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தர்பாரின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக்குடன் நவம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.
இது உங்க தர்பார் அனி, இறங்கி விளையாடுங்க.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?