Cinema
சாக்ஸபோன் இசைக் கலைஞர் பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத் காலமானார்... திரையுலகினர் அஞ்சலி!
சாக்ஸபோன் என்று கூறியதும் அனைவரது நினைவுக்கும் முதலில் வருபவர் கத்ரி கோபால்நாத். இசைக் கச்சேரிகளை விட டூயட் படத்தில் அஞ்சலி பாடல் இவரைப் பற்றி நினைவுகூர மிக முக்கிய அம்சமாக அமையும்.
இசைக்குடும்பத்தில் பிறந்ததால் கத்ரி கோபால்நாத்தையும் இசை விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த கத்ரி கோபால்நாத் முதலில் மைசூர் அரண்மனையில் நடைபெற்ற இசை விழாவின் போது சாக்ஸபோன் இசையால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
அதன் பிறகு மேற்கத்திய இசையான சாக்ஸபோன் கற்பதில் ஆர்வம் கொண்ட கத்ரி, கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபால கிருஷ்ண ஐயரிடம் முதலில் சாக்ஸபோன் வாசிக்கக் கற்றுக்கொண்டு பின்னர், சென்னையைச் சேர்ந்த டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் சாக்ஸபோன் இசைக்கான முழு பயிற்சியையும் பெற்றார்.
அதன் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இசை கச்சேரி நடத்திய கத்ரி கோபால்நாத், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி டூயட் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றினார். அப்படத்தின் அஞ்சலி பாடலை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது.
பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, கர்நாடக கலாஸ்ரீ, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி என பற்பல விருதுகளைப் பெற்றுள்ளார் கத்ரி கோபால்நாத்.
மங்களூருவில் தனது மனைவி மக்களுடன் வசித்து வந்த கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு இசைத் துறை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பல துறைகளைச் சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கத்ரி கோபால்நாத்தின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் உள்ளதால் அவர் வந்தவுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என அவரது குடும்பத்தினர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!