Cinema
கார்த்தியை இயக்கும் இயக்குநர்களுக்கு கிடைக்கும் அசத்தல் வாய்ப்பு : இப்படியொரு சென்டிமென்ட்டா?
கமர்ஷியல் திரைப்படங்களுக்கு நடுவே, சீரியஸான சில படங்களையும், வித்தியாசமான ஸ்கிரிப்டுகளையும் நம்பக்கூடிய நடிகர் கார்த்தி. அறிமுகப் படமான பருத்திவீரனில் துவங்கி தீரன் அதிகாரம் ஒன்று படம் வரை இவரின் செலக்ஷனில் ஒரு தனித்துவம் இருக்கும்.
இயக்குநர்களைத் தேர்தெடுப்பதில் கார்த்தியிடம் ஒரு நேர்த்தி இருக்கும். கார்த்தியை இயக்கிய, குறிப்பிட்ட சில இயக்குநர்கள் ஒன்றிரண்டு படங்களில் உச்ச நடிகர்களை இயக்கிவிட்டனர் என்பதன் மூலமே அது வெளிப்படை.
2014-ல் கார்த்தி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் மெட்ராஸ். சென்னை மக்களின் வாழ்வியலையும், சாதிய அரசியலையும் பேசிய இந்தப் படம் பெரிய ஹிட். இந்தப் படம் ஏற்படுத்திய அலையால், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அடுத்த வாய்ப்பு ரஜினியிடமிருந்து தேடிவந்தது. கபாலி, காலா என இரண்டு படங்களை ரஜினியை வைத்து இயக்கிவிட்டார் பா.ரஞ்சித்.
2017-ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம், கார்த்தியின் கரியரில் ரொம்பவே முக்கியமான ஒன்று. ஹெச்.வினோத் இயக்கிய இந்தப் படமும் வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரிதும் பேசப்பட்டது. உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை பெஸ்ட்டாக கொடுத்திருப்பார் இயக்குநர். இந்தப் படத்தை இயக்கிய வினோத்துக்கு அடுத்த அழைப்பு அஜித்திடம் இருந்து வந்தது. அது, நேர்கொண்ட பார்வை திரைப்படமாக வெளியாகி அதுவும் பெரிய ஹிட். அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது கார்த்தி நடித்துவரும் கைதி படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. நாயகி இல்லாத திரைப்படம். மாநகரம் படத்தை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். கார்த்தியின் கைதி முடிவதற்கு முன்பே, விஜய் படத்தில் கமிட்டாகிவிட்டார் இவர். விஜய் 64 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். அனிருத் இசையில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நிச்சயம், கார்த்தி ஒரு லக்கி மேன் தான். இவரை இயக்கிய இயக்குநர்கள் அடுத்த படத்திலேயே ரஜினி, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களை இயக்கிவிடுகிறார்கள். இல்லையென்றால், நல்ல இயக்குநர்களை தேடிப்பிடித்து படம் நடிக்கிறார் கார்த்தி என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!