Cinema
‘கலைமாமணி’ விருதுகள் வழங்காமல் 8 ஆண்டுகளாக கோமாவில் கிடந்த அரசு... ஒருவழியாக தேதி அறிவிப்பு!
தமிழக அரசினால் ஆண்டுதோறும் தமிழ் திரைப்படம், கலை, இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட துறைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான எந்த நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபடவில்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி, 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்கான விருது பட்டியல் விவரங்கள்:
2011: லேனா தமிழ்வாணன், கோவி.மணிசேகரன் (இயற்றமிழ்), அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை), நடிகர்கள் ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், நகைச்சுவை நடிகர் பாண்டு, நடிகை குட்டி பத்மினி, புலியூர் சரோஜா (திரைப்பட நடன இயக்குநர்). சசிரேகா (பாடகி) உள்ளிட்ட 30 கலைஞர்கள்.
2012: மகாநதி ஷோபனா, நடிகைகள் ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, இயக்குநர் & நடிகர் சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன் உள்ளிட்ட 30 பேர்.
2013: நடிகர் பிரசன்னா, இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், நடிகைகள் நளினி, பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா, சாரதா, காமெடியன் டி.பி.கஜேந்திரன், பரவை முனியம்மா உள்ளிட்ட 30 பேர்.
2014: நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாடகி மாலதி, நடன இயக்குநர் தாரா மாஸ்டர், மூத்த பத்திரிகையாளர் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 30 பேர்.
2015: நடிகர் பிரபுதேவா, விஜய் ஆண்டனி, கானா பாலா, இயக்குநர் பவித்ரன், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, நாடக நடிகர் மாது பாலாஜி உள்ளிட்ட 20 பேர்.
2016: நடிகர்கள் சசிகுமார், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர். காமெடியன் சூரி, பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன் உள்ளிட்ட 20 பேர்.
2017: நடிகர் விஜய் சேதுபதி, சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, காமெடியன் சிங்கமுத்து, இயக்குநர் ஜி.ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட 28 பேர்
2018: நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம், பாடகர் உன்னி மேனன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மருத்துவ நூல் ஆசிரியர் டாக்டர் அமுதகுமார் உள்ளிட்ட 34 பேருக்கு கலைமாமணி வழங்கப்படுகிறது.
இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது பெறும் 201 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்படவிருக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?