Cinema
சினி அப்டேட்ஸ் 5 : மிர்ச்சி சிவாவின் அடுத்த படம்... பாலாஜி மோகனின் புதிய நிறுவனம்!
1. தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாலாஜி மோகன்
இயக்குநர் பாலாஜி மோகன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, 'வாயை மூடிப் பேசவும்', 'மாரி', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தவிர, 'As i'm Suffering from Kadhal' என்ற வெப் சிரீஸும் இயக்கியுள்ளார். தற்போது புதிதாக 'ஓபன் விண்டோ' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் பாலாஜி மோகன்.
“புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். 'ஓபன் விண்டோ' என்ற எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்குகிறேன். நாளை (ஜூலை 22) பெருமைக்குரிய கூட்டுத் தயாரிப்பாக இருக்கப்போகும் எங்களது முதல் திரைப்படம் பற்றி அறிவிக்கவுள்ளேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுடன்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
2. கதிரின் ‘சர்பத்’தில் அறிமுகமாகும் இளம் நடிகை!
பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு, கோலிவுட்டின் கவனிக்கப்படும் நாயகனாக மாறிவிட்டார் நடிகர் கதிர். தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர், தற்போது விஜய்யின் 63வது படமான பிகில் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் கதிரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கதிர், சூரி நடிக்கவிருக்கும் அப்படத்துக்கு சர்பத் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், படத்தில் கதிருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை ரஹஸ்யா கோராக் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர், தெலுங்கில் “ராஜா வாரு ராணி காரு” படத்தின் மூலம் பிரபலமானவர். விரைவிலேயே கதிரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. Zoya Factor படம் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ்!
ஆகாஷ் குரானா இயக்கத்தில் வெளியான கர்வான் படம் மூலம், பாலிவுட்டுக்கு தனது அறிமுகத்தைக் கொடுத்தவர் துல்கர். துல்கரோடு இணைந்து, இர்ஃபான் கான், மிதிலா பால்கர் உள்ளிட்ட பலரும் நடித்தனர். அடுத்ததாக, Anuja Chauhan எழுதிய The Zoya Factor என்கிற நாவலை மையமாக வைத்து உருவாகிவரும் பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார் துல்கர்.
இப்படத்துக்கும் The Zoya Factor என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிரிக்கெட் டீம் கேப்டனாக நடித்திருக்கிறார் துல்கர். டைட்டில் ரோலான ஸோயா கதாபாத்திரத்தில் சோனம் கபூர் நடித்துள்ளார். அபிஷேக் வர்மா இயக்கியிருக்கும் இப்படம், ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. சரியான ரிலீஸ் கிடைக்காததால் தள்ளிப்போய், செப்டம்பர் 20ஆம் தேதி வெளியீடு உறுதியாகியுள்ளது. இரண்டாவது முறையாகவும் பாலிவுட்டில் மேஜிக் செய்திருக்கிறாரா மல்லுவுட் ஹீரோ என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
4. ராஜீவ் மேனன் படத்தில் மிர்ச்சி சிவா?
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என இரண்டு அவதாரத்திலும் தமிழ்சினிமாவை கலக்கி வருபவர் ராஜிவ் மேனன். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் இவர் இயக்கிய சர்வம் தாளமயம் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்றது. தொடர்ந்து, ராஜீவ் மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை 28 - 2, கலகலப்பு - 2, தமிழ்படம்- 2 என வரிசையாக வெளியான எல்லா படங்களும் ஹிட்டான நிலையில், இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம் சிவாவுக்கு. ராஜீவ் மேனனின் இந்தப் படத்துக்கும், இசை ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது சுமோ படத்தில் நடித்துவருகிறார் சிவா. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றி வருவது கூடுதல் தகவல்.
5. வைரலாகும் டெர்மினேட்டர் படத்தின் மேக்கிங் வீடியோ!
1984 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகமெங்கும் வெற்றியடைந்த படம் ‘தி டெர்மினேட்டர்’. அர்னால்டு சுவார்செனேகர் நாயகனாக நடித்திருப்பார். எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் இயந்திர மனிதனான அர்னால்டு, வில்லன் ரோபோவிடமிருந்து உலகத்தை காப்பாற்றும் கதையே அனைத்து பாகங்களின் கதைக்களமும்.
இதுவரை ஐந்து பாகங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அடுத்ததாக ‘டெர்மினேட்டர் : டார்க் ஃபேட்’ என்கிற படம் தற்போது தயாராகிவருகிறது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தை டிம் மில்லர் இயக்க, கேம்ஸ் கேமரூன் தயாரித்துள்ளார். நவம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!