Cinema
சினி அப்டேட்ஸ் : ரஜினி படத்தை இயக்கப்போவது யார்..? பஞ்சாபில் கர்ஜிக்கப் போகும் சிங்கம்..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ செம ஹிட். அடுத்த கட்டமாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. லைகா இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ’நேர்கொண்ட பார்வை’ இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோரில் ஒருவரின் படத்தில் ரஜினி நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில், மூன்று பேரிடமுமே கதை குறித்து பேசியிருக்கிறார் ரஜினி. இயக்குநர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் யார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. ரஜினியின் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.
*****
விஜய பாஸ்கர் இயக்கத்தில் 2002ல் வெளியான தெலுங்கு படம் `மன்மதடு’. நாகர்ஜுனா, சோனாலி பிந்த்ரே நடித்த இந்தப் படம் செம ஹிட்டானது. பதினேழு வருடம் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. `Chi La Sow’ படம் மிகப் பெரிய ஹிட்டானதால், அந்தப் பட இயக்குநர் ராகுல் ரவீந்திரனுக்கு `மன்மதடு 2’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் நாகர்ஜூனா. கூடவே படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்போது படத்தின் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் கதாபாத்திரத்துக்கான இன்ட்ரோ டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதுவும் வெளியாகி படத்துக்கு நல்ல ஹைப் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
*****
ஹரி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘சிங்கம்’. சூர்யாவின் 25வது படமாக வெளியான இது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனாலேயே, கன்னடம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. கூடவே சிங்கம் படத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்கள் தமிழில் வெளியானது. தற்போது இந்த சிங்கம் விரைவிலேயே பஞ்சாப்பில் கர்ஜிக்கப் போகிறது.
Navaniat Singh இயக்கத்தில் பஞ்சாபியில் ரீமேக் ஆகியிருக்கிறது ’சிங்கம்’. ஆனால், இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இது நேரடியாக தமிழில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக் அல்ல. சிங்கம் படத்தில் சில மாற்றங்கள் செய்து, ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்திருந்தார். அந்த இந்தி ரீமேக் சிங்கம்தான் இப்போது பஞ்சாபியில் ரீமேக் ஆகியிருக்கு. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. படம் ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!