Cinema
‘பொறக்கும்போது ட்ரஸ்ஸோடயா பொறந்தோம்’ - ஆடை ட்ரெய்லர்! : Cine Updates 5
1. ‘பொறக்கும் போது ட்ரஸ்ஸோடயா பொறந்தோம்’ - ஆடை ட்ரெய்லர்!
'மேயாத மான்' படத்தின் இயக்குநர் ரத்னகுமாரின் அடுத்த படம் ‘ஆடை’. இதில் நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். படத்தின் டீஸர், போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்று வெளியிட்டார். ஏற்கெனவே டீஸரை கரண்ஜோகர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
2. சமூக வலைதளங்களில் லீக்கான பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக்!
அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாஃபியா’. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் துவங்கி நடந்துவருகிறது. சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கூட வெளியானது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்நேரத்தில், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, அருண்விஜய் நடித்துவரும் ‘பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிடவில்லை. யாரோ லீக் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அருண்விஜய்யிடம் பேசும்போது, “ எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, போஸ்டர் வெளியானது கொஞ்சம் வருத்தம் தான். இந்தப் போஸ்டரை யாரோ லீக் செய்திருக்கிறார்கள் என்பதே எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. இது எங்களுடைய 9 மாத உழைப்பு. படத்துக்காக 100 சதவிகித உழைப்பை கொடுத்துவருகிறேன். படத்துக்கு சில ட்ரான்ஸ்ஃபர்மேஷன் தேவைப்படுவதால் படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு நன்றி” என்று கூறினார். தற்போது நடந்துவரும் ‘மாஃபியா’ பட படப்பிடிப்பு முடிந்த கையோடு, பாக்ஸர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
3. அதிரடி காட்டும் ‘நாடோடிகள் 2’ டீஸர்!
சசிகுமார் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படம் ‘நாடோடிகள்’. பத்து வருடங்கள் கழித்து, படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்புராயன், எம்.எஸ்,பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இசை ஜஸ்டின் பிரபாகரன். முதல் பாகத்துக்கும் இந்தப் பாகத்துக்கும் எந்த வித தொடர்ச்சியும் இருக்காதாம். படத்தின் கதை, முந்தைய பாகத்துடன் ஒத்துப் போகும் என்பதால் மட்டுமே அதே டைட்டில் என்று சொல்லப்படுகிறது.
4. கொரில்லா ரிலீஸ் எப்போது?
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கொரில்லா’. ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். கொரில்லா குரங்கோடு கொள்ளையடிக்க சொல்லும் ஒரு டீம், அதில் நடக்கும் மொக்கைகளும், காமெடிகளுமே கதைக்களம். ஜீவா, ஷாலினி பாண்டேவோட சேர்ந்து ராதா ரவி, யோகிபாபு, சதிஷ், ராம்தாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரிலீஸூக்கு ரெடியாகிவிட்ட நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது படத்தை கடந்த ஜூன் 21ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு, வழக்கம் போல ஜீவாவின் இந்தப் படத்தோட ரிலீஸும் தள்ளிப் போனது. ஏற்கெனவே இரண்டு, மூன்று ரிலீஸ் தேதிகளை அறிவித்தும் வெளியானபாடில்லை. இந்நிலையில் இறுதியாக, ஜூலை 12ம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு.
5. கலெக்ஷனுக்காக ரசிகர்களை கட்டாயப்படுத்தும் மார்வெல்!
கடந்த ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வந்த ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படம் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம். உலகமெங்கும் 2.771 பில்லியன் டாலர்கள் வரை வசூல் சாதனை புரிந்தது. இன்றும் பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கலெக்ஷன் மார்வெலுக்கு போதாதாம். உலகமே எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவதாரின் வசூல் சாதனையை மார்வெல் முறியடிக்குமா என்பதே! ஏனெனில் அவதார் படமானது 2.783 பில்லியன் வசூலித்திருக்கிறது. அதை முறியடிக்கவேண்டுமென்றால் இன்னும் 12 மில்லியன் டாலர் தேவைப்படும் நிலையில், மார்வெல் நிறுவனம் அவெஞ்சர் எண்ட் கேம் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்திருக்கிறது. அதற்காக சில நீக்கப்பட்ட காட்சிகள், போஸ்ட் கிரெடிட் காட்சிகள் சேர்த்து மீண்டும் சில நாடுகளில் வெளியிட்டிருக்கிறது மார்வெல். இதில் இந்தியாவும் அடக்கம்.
இந்த வசூல் போராட்டத்தில் சினிமா ரசிகர் ஒருவரின் ட்விட் வைரலாகி வருகிறது. “அவதார் படம் எந்த ஒரு ரசிகனும் பார்க்கக் கூடிய படம். அதற்கென ஒரு பெரிய சீக்குவல் கிடையாது. அதனால் ஈஸியாக இப்படியான ஒரு ரெக்கார்ட் கலெக்ஷனை செய்துவிட்டது. ஆனால் அவெஞ்சர்ஸ் திரைப்படம் அப்படி கிடையாது. இந்தப் படம் புரியவேண்டும் என்றாலே, அதன் முந்தைய பாகங்களை பார்த்தாக வேண்டும். அப்படி இருக்கையில், அவதாரின் வசூலை எப்படி இது முறியடிக்கும்? இதில் ரெக்கார்ட் பிரேக் செய்வதில் ஏன் இத்தனை போராட்டம்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நியாயம்தானே?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!