Cinema
அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் லேட்டஸ்ட் படங்கள்!
அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ ஃபைவ் உள்ளிட்ட ஆன்லைன் சினிமா ஒளிபரப்புத் தளங்கள் பரவலான பிறகு, நல்ல படங்களைப் பார்க்காமல் மிஸ் செய்துவிட்டோமே எனக் கவலைகொள்ளத் தேவையற்றுப் போய்விட்டது.
திரையரங்குகளில் படம் வெளியான ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே எல்லாப் படங்களும் அதிகாரப்பூர்வமாக ஆன்லைன் தளங்களில் கிடைத்துவிடுகின்றன. ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சில முக்கியமான படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்த எலித் தொல்லை பற்றிய வித்தியாசமான கருத்து கொண்ட படமான ‘மான்ஸ்டர்’ தற்போது அமேஸான் ப்ரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சீதக்காதி’, அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’, மம்முட்டி நடிப்பில் ராம் இயக்கத்தில் பல திரைப்பட விழாக்களில் விருது பெற்ற ‘பேரன்பு’ ஆகிய திரைப்படங்கள் அமேஸானில் பார்க்க கிடைக்கின்றன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படங்களான ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘இஷ்க்’ ஆகியவை அமேஸான் ப்ரைமில் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘தெய்வம் சாக்ஷி’, மோகன்லாலின் ‘லூசிஃபர்’, நிவின் பாலியின் ‘மைக்கேல்’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் அமேசானில் வெளியிடப்பட்டுள்ளன.
தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற ‘மஜிலி’, ‘ஃபலக்குனமா தாஸ்’, ‘சீதா’, மஹர்ஷி’ ஆகிய படங்களை அமேஸான் ப்ரைமில் பார்க்கலாம்.
கன்னட சினிமாவில் கவனிப்பு பெற்ற த்ரில்லர் திரைப்படங்களான ‘கவலுதாரி’, ‘சாம்பால்’ ஆகிய படங்களும் அமேஸான் ப்ரைமில் கிடைக்கின்றன. ‘நட்டசார்வபௌமா’, ‘பஞ்சதந்த்ரா’ ஆகிய கன்னட படங்கள் ஜீ ஃபைவ் தளத்தில் கிடைக்கின்றன.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !