Cinema
‘கடாரம் கொண்டான்’ ட்ரெய்லர்... ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ டீசர்!
விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ட்ரெய்லர் :
விக்ரம் நடிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் தயாராகிவரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கமல் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ படம் மூலம், கோலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜேஷ் செல்வா. இவர், தற்போது இயக்கிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். விக்ரமுடன் இணைந்து கமலின் மகள் அக்ஷரா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஷபீர் இருவரும் பாடியிருந்த சிங்கிள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விக்ரமின் வித்தியாசமான கெட்டப், ஜிப்ரானின் மிரட்டல் இசை என இந்த ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது. படத்தை வருகிற 19-ம் தேதி வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் டீஸர் :
சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகிவரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சுந்தரபாண்டியன் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு, சசிகுமார் மற்றும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. குற்றம் 23, தடம் படங்களைத் தொடர்ந்து ரேதன் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டியன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சூரி, ஹரிஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1990 - 1994 கால கட்டங்களில் தமிழகத்தில் ஒரு சில நகரங்களில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெஷல் என்னவென்றால், திட்டமிட்டபடியே ஒரே ஷெட்யூலில் படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது படக்குழு. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் படக்குழு, தற்பொழுது படத்தின் டீஸர் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?