Cinema
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த பாகத்துக்கான பணிகள் தொடக்கம்!
ஹாலிவுட் படங்களின் நீண்ட வரிசையில் ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ படத்துக்கான இடம் கண்டிப்பாக இருக்கும். துப்பறியும் டிடெக்டிவ் ஒருவர் ரகசிய ஏஜென்டாக இருந்து எப்படி குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்டுப்பிடிக்கிறார் என்பதை அடிப்படையாக உருவாக்கப்பட்டதுதான் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கதைகளம்.
இதுவரைக்கும் 24 பாகங்கள் இந்த ஜேம்ஸ் பாண்ட் கதையம்சத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்து வெற்றியடைந்திருக்கிறது. இந்த நிலையில 25-வது பாகத்தை எடுப்பதற்காகத் தயாராகியிருக்கிறது சோனி நிறுவனம்.
இந்த 25-வது பாகத்தை ‘Slumdog Millionaire’, ‘127 Hours’ போன்ற படங்களை இயக்கிய டேனி போயஸ்(Danny Boyle) இயக்க இருக்கிறார். இதுக்கு முன்னதாக இந்த 25-வது பாகத்தை இயக்குவதற்கு Skyfall, Spectre director போன்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய Sam Mendes தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இந்தப் படத்தில் இருந்து விலகியதால் டேனி பாயல் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இதற்கு முன் 'கேசினோ ராயல்', ‘Quantum of Solace’, 'ஸ்கைஃபால் அண்ட் Spectre' போன்ற படங்களில் நடித்திருந்த டேனியல் க்ரிக் தான் நடிக்க இருக்கிறார். அவருக்கு வில்லனாக ஆஸ்கார் விருது பெற்ற ரமி மாலெக் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் Gareth Mallory, Naomie Harris, Rory Kinnear, Ben Whishaw, Léa Seydoux ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நார்வே, இத்தாலி மற்றும் கரீபியன் தீவுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘பாண்ட் 25’ என்ற தலைப்பில் அழைக்கப்பட்டும் என்றும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி படம் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!