Cinema

திரைப்பட தேசிய விருதுகள் : தேர்தல் முடிந்த பிறகே அறிவிக்கப்படும் ! 

1954 ஆம் ஆண்டு முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2012 முதல் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிசந்திரா வெளியான மே 3 ஆம் தேதியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் விருது அறிவித்தால் அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேர்தலுக்கு பின்னர்தான் விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போதே விருதுகள் அறிவிக்கப்பட்டு மே 3 ஆம் தேதி விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.

கடந்த ஆண்டு குடியரசு தலைவருக்குப் பதிலாக பெரும்பாலான விருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வழங்கியதால் விருதை பலரும் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது