முரசொலி தலையங்கம்

இதுதான் பாஜகவின் சமூகநீதியா ? - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !

இந்­தியா கூட்­ட­ணி­தான் ஆட்சிக்கு வரும் என்பதில் மோடி­ அதி­க­மான நம்­பிக்­கை­யில் இருக்­கி­றார் என முரசொலி தெரிவித்துள்ளது.

இதுதான் பாஜகவின் சமூகநீதியா ?  - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (01.05.2024)

சமூகநீதியை யார் பேசுவது?

தினந்­தோ­றும் ஏதா­வது ஒரு பீதி­யைக் கிளப்பி விடு­வது பிர­த­மர் மோடி­யின் பணி­யாக உள்­ளது. ‘உங்­கள் தாலி போகப் போகி­றது?’ என்று சொன்­ன­வர் இப்­போது சமூ­க­நீ­தி­யைப் பற்றி பேசத் தொடங்கி இருக்­கி­றார். சமூக அநீ­தி­யின் நாய­க­ரான அவ­ரெல்­லாம் சமூ­க­நீ­தி­யைப் பற்றி பேசத் தொடங்கி இருக்­கி­றார். ‘பட்­டி­ய­லின –- பழங்­குடி மக்­க­ளின் இட­ஒ­துக்­கீட்டை எல்­லாம் சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு கொடுத்­து­வி­டப் போகி­றது இந்­தியா கூட்­டணி ஆட்சி’ என்று சொல்லி இருக்­கி­றார் பிர­த­மர் மோடி.

இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால் ... இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால்... என்று தினந்­தோ­றும் ஏதா­வது ஒரு மாநி­லத்­தில் பேசிக் கொண்­டி­ருப்­ப­வர் அவர்­தான். இந்­தியா கூட்­ட­ணி­யின் ஆட்­சி­தான் வரும் என்­பதை இக்­கூட்­ட­ணித் தலை­வர்­களை விட மோடி­தான் அதி­க­மான நம்­பிக்­கை­யில் இருக்­கி­றார். அத­னால்­தான் அவர்­கள் ஆட்­சி­யில் என்­ன­வெல்­லாம் செய்­யப் போகி­றார்­கள் என்­பதை அவர் விளக்­கு­வ­தில் தனது நேரத்­தைச் செலவு செய்­கி­றார். தனது ஆட்­சிக் காலத்­தில் பட்­டி­ய­லின -– பழங்­குடி மக்­க­ளின் சமூ­க­நீதி உரி­மை­க­ளைப் பற்றி கவ­லையேபடா­த­வர் தான் பத்­தாண்டு காலம் பிர­த­ம­ராக இருந்த மோடி. சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ஒ­துக்­கீடு என்­பதே சமூ­க­ரீ­தி­யா­க­வும், கல்வி ரீதி­யா­க­வும் பின் தங்­கி­ய­வர்­க­ளுக்­குத் தரப்­பட வேண்­டும் என்­ப­து­தான் இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட வரை­யறை ஆகும். இதில் பொரு­ளா­தார அள­வு­கோலை புகுத்­தும் முயற்­சியை பல­ரும் பல­கா­ல­மா­கச் செய்ய முயற்­சித்­தார்­கள். முடி­ய­வில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சி அதனை செயல்­ப­டுத்தி விட்­டது. உயர்­ஜா­தி­யி­ன­ருக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க – உயர் ஜாதி ஏழை­கள் என்று போட்டு - – மாதம் ரூ.60 ஆயி­ரம் சம்­ப­ளம் வாங்­கு­ப­வரை ஏழை­யா­கக் காட்டி சமூ­க­நீதி மோசடி செய்­தது மோடி ஆட்சி.

இதுதான் பாஜகவின் சமூகநீதியா ?  - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !

மருத்­து­வப் படிப்­பில் இதர பிற்­ப­டுத்­தப்பட்­ட­வர்க்கு 27 சத­வி­கி­தம் வழங்க வேண்­டும் என்று நீதி­மன்­றங்­கள் சொன்ன போது 27 சத­வி­கி­த­மும் தர மாட்­டோம், 50 சத­வி­கி­த­மும் தர மாட்­டோம் என்று நீதி­ மன்­றத்­தில் முத­லில் வாதிட்­டது மோடி அரசு.உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் பட்­டி­யல் சாதி (SC), பழங்­கு­டி­யி­னர் (ST), இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­னர் (OBC) இடங்­க­ளுக்­குப் பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரர்­கள் கிடைக்­க­வில்லை என்­றால் பொதுப் பிரி­வி­ன­ருக்கு அவற்­றைத் கொடுக்­க­லாம் என்று SC, ST மற்­றும் OBC விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு நீக்­கு­வ­தற்­கான வரைவு வழி­காட்­டு­தல்­களை வெளி­யிட்­டது மோடி ஆட்சி யு.ஜி.சி. இவர்­கள்­தான் இன்று சமூக நீதி­யைப் பற்றி பேசு­கி­றார்­கள்.

விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த விழுப்­பு­ரம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவிக்­கு­மார் அவர்­கள், ‘இட­ஒ­துக்­கீட்டை அழிக்­கும் மோடி அரசு’ என்ற தலைப்­பில் ஒரு அறிக்­கையை வெளி­யிட்டு இருந்­தார். அதில் பல்­வேறு உதா­ர­ணங்­க­ளைச் சொல்லி இருந்­தார்.

* மோடி அரசு ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்­கீட்டை சரி­யா­கப் பின்­பற்­று­வ­தில்லை. 2021-–22 ஆம் ஆண்­டுக்­கான அகில இந்­திய உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளின் ஆய்­வ­றிக்­கை­யைப் (AISHE Report) பார்த்­தால் இதைப் புரிந்து கொள்­ள­லாம். இந்­தியா முழு­வ­தும் உள்ள உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் மொத்­தம் 15,97,688 ஆசி­ரி­யர்­கள் பணி புரி­வ­தாக அந்த அறிக்கை கூறு­கி­றது ( பக்­கம் 161). அதில் எஸ்.சி. பிரி­வி­ன­ருக்கு 15% இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டி­ருந்­தால் 2,39,653 பேர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். ஆனால் 1,48,635 பேர்­தான் எஸ்.சி. பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் ஆசி­ரி­யர்­க­ளாக உள்­ள­னர். 91,018 இடங்­கள் மறுக்­கப்­பட்டு பின்­ன­டை­வாக உள்­ளன.

* எஸ்.டி. பிரி­வி­ன­ருக்கு 7.5% இட ஒதுக்­கீடு அளிக்­கப்­ப­ட­வேண்­டும். அதன்­படி 1,19,826 பேர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். ஆனால், 41,607 பேர் மட்­டுமே எஸ்.டி. பிரி­வி­லி­ருந்து ஆசி­ரி­யர் பணி­யில் உள்­ள­னர். 78159 இடங்­கள் மறுக்­கப்­பட்டு பின்­ன­டை­வாக உள்­ளன.

இதுதான் பாஜகவின் சமூகநீதியா ?  - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !

* ஆசி­ரி­யர் அல்­லாத பணி­யி­டங்­க­ளி­லும் இதே போன்று இட ஒதுக்­கீடு மறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய அள­வில் ஒட்­டு­மொத்­த­மாக 12,08,446 ஆசி­ரி­யர் அல்­லாத பணி­யி­டங்­கள் உள்­ளன. அதில் எஸ்.சி. வகுப்­பி­னர் 1,81,876 பேர் உள்­ள­னர்; எஸ்.டி. வகுப்­பி­னர் 56,569 பேர் உள்­ள­னர். ஆனால் அவர்­க­ளில் பெரும்­பா­லோர் 4 ஆம் நிலை பத­வி­க­ளி­லேயே உள்­ள­னர்.

* மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறு­வ­னங்­கள்­தான் ஒன்­றிய அர­சால் நடத்­தப்­ப­டு­பவை. அவற்­றி­லும் ஆயி­ரக்கணக்­கான இடங்­கள் நிரப்­பப்­ப­டா­மல் கிடக்­கின்­றன.

* மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் எஸ்.சி. பிரி­வி­ன­ருக்­கென ரிசர்வ் செய்­யப்­பட்ட 307 பேரா­சி­ரி­யர் பத­வி­க­ளில் 231ம்; 620 இணைப் பேரா­சி­ரி­யர் பத­வி­க­ளில் 401 ம்; 1357 உத­விப் பேரா­சி­ரி­யர் பத­வி­க­ளில் 276 ம் நிரப்­பப்­ப­டா­மல் காலி­யாக உள்­ளன. எஸ்.டி. பிரி­வி­ன­ருக்கு அது­போ­லவே 123 பேரா­சி­ரி­யர், 232 இணைப் பேரா­சி­ரி­யர் மற்­றும் 188 உத­விப் பேரா­சி­ரி­யர் பத­வி­கள் காலி­யாக உள்­ளன. ஓ.பி.சி. பிரி­வி­ன­ருக்கு 367 பேரா­சி­ரி­யர் பத­வி­க­ளில் 311 பத­வி­க­ளும்; 752 இணைப் பேரா­சி­ரி­யர் பத­வி­க­ளில் 576ம்; 2332 உத­விப் பேரா­சி­ரி­யர் பத­வி ­க­ளில் 672 ம் நிரப்­பப்­ப­ட­வில்லை.

* ஐ.ஐ.டி.களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரி­வி­ன­ருக்­கென ஒதுக்­கப்­பட்ட 11,170 ஆசி­ரி­யர் பத­வி­க­ளில் 4,502 பத­வி­கள் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன. ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரி­வி­ன­ருக்கு ரிசர்வ் செய்­யப்­பட்ட 97 பத­வி­க­ளில் 53 இடங்­க­ளும் எஸ்.டி. பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்ட 40 பத­வி­க­ளில் 34 இடங்­கள் நிரப்­பப்­ப­ட­வில்லை. ஓ.பி.சி. பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்ட 184 இடங்­க­ளில் 98 இடங்­கள் நிரப்­பப்­ப­ட­வில்லை.

இது­தான் பா.ஜ.க. மோடி அர­சின் சமூக நீதி­யா­கும். இவர்­தான் இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால் பட்­டி­ய­லின - பழங்­குடி இட­ஒ­துக்­கீடு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு போய்­வி­டும் என்று பீதி­யைக் கிளப்­பு­கி­றார்.

banner

Related Stories

Related Stories