தேர்தல் 2024

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியின் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna), ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். கடந்த ஏப்.26-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும், பணிப்பெண்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பல பெண்களையும் மிரட்டி தனது பாலியல் ஆசைக்கு இணங்குமாறு பிரஜ்வல் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !

இந்த வீடியோ விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியதோடு, மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்றுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிரஜ்வல் மீது போலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூரு மற்றும் ஹாசன் நகரில் உள்ள அவர்களுடைய வீட்டில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைத்து மொபைல் போனில் பல வீடியோக்கள் பதிவு செய்தது தெரியவந்தது. மேலும் ஆபாச வீடியோ தொடர்பான பென் டிரைவில், சுமார் 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளதும் கண்டறியப்பட்டது.

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பிரஜ்வலின் தந்தை மீதும் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் ரீதியாக ரேவண்ணா தொந்தரவு செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போதெல்லாம் தன்னை அடிக்கடி அவருடைய வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பார் என்றும், தனது ஆடைகள் மேல் கைவைத்து அத்துமீறுவார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !

இந்த புகார் மேலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேவண்ணா மீது 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனான HD ரேவண்ணா, ஹோலேநரசிப்பூர் தொகுதியில் கடந்த 2004 முதல் தற்போது வரை (2024) தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். 2004-ம் ஆண்டு அமைச்சராகவும் இருந்தார். இந்த சூழலில் தற்போது இவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories