Politics

மணிப்பூரில் தொடரும் கலவரம்: துப்பாக்கி சூடு,மத்திய பாதுகாப்பு படையினர் முன் சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி!

ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது. இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை. இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டும் இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால், காலையில் இருந்தே அங்கு தொடர்ந்து வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டு வருவது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் மாநிலம் உள்மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல மணிப்பூரின் தமான் போக்பி பகுதியில் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹிரோய் ஷம்பா பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அச்சமான சூழல் நிலவுகிறது.

அத்துடன் மேலும் எரோய்ஷம்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மத்திய பாதுகாப்பு படையினரின் முன்பே சூறையாடப்பட்டதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த பாஜக வேட்பாளர் : எதிர்ப்பால் பகிரங்க மன்னிப்பு கோரினார் !